'எப்போது வந்தாலும் அமர்க்களம்தான்'...! - வைரமுத்து சொன்ன அந்த 'மாஸ்' அப்டேட் எதைப் பற்றி தெரியுமா...?
Whenever it comes its Amarkalam Do you know what that mass update that Vairamuthu said about
நடிகர் அஜித் மற்றும் ஷாலினி திருமண நாளை முன்னிட்டு, அவர்கள் இணைந்து நடித்த அமர்க்களம் திரைப்படம் இன்று முதல் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இந்த சிறப்பு தருணத்தை ஒட்டி, கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் உணர்ச்சி மிகுந்த பதிவை பகிர்ந்துள்ளார்.

அவர் பதிவில், “எப்போது வெளியானாலும் ‘அமர்க்களம்’ என்றென்றும் அமர்க்களம்தான். குறிப்பாக ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்ற பாடல், தனித்துவத்தின் உச்சியை தொட்ட படைப்பு. 89 வரிகளைக் கொண்ட நீளமான அந்தப் பாடல், ஒவ்வொரு வரியிலும் புதுமையான உணர்ச்சிகளை பொழிகிறது.
அந்த உணர்வுகளை புயல்போல் வெளிப்படுத்திய அஜித்தின் நடிப்பு பாராட்டத்தக்கது” என தெரிவித்துள்ளார்.மேலும், “இந்த படைப்பை உருவாக்கிய இயக்குநர் சரண் மற்றும் இசையமைப்பாளர் பரத்வாஜ் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
செஞ்சிக்கோட்டை நிலைத்திருக்கும் வரை தேசிங்கு ராஜாவின் புகழ் நிலைத்திருப்பது போல, செஞ்சி மலையில் படமாக்கப்பட்ட இந்தப் பாடலும் காலத்தைக் கடந்து நிலைத்திருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “இந்த பாடலை இனிமையுடன் உயிர்ப்பித்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இன்மையை இந்நேரத்தில் மேலும் தீவிரமாக உணர்கிறேன்” எனவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Whenever it comes its Amarkalam Do you know what that mass update that Vairamuthu said about