பழைய வரலாற்றை மாற்றும் பாஜக...! ‘அங்கம், வங்கம், கலிங்கம்’ மூன்றிலும் தாமரை மலரும்...! - அமித்ஷா அதிரடி
BJP change old history Lotus bloom all three Angam Bengal Kalingam Amit Shah takes action
மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு மக்களின் உற்சாகக் களமாக சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமித் ஷா தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “2026ஆம் ஆண்டுக்கான மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு, இதுவரை காணாத அளவிலான உற்சாகத்துடன் நடைபெற்றுள்ளது. 16 மாவட்டங்களில் உள்ள 52 தொகுதிகளில் சுமார் 92.98% என்ற கணிசமான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

இது ஒரு சாதாரண எண்ணிக்கையல்ல; மாற்றத்தை நாடி மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பதற்கான தெளிவான சான்றாகும்” என தெரிவித்தார்.“காலை முதலே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தினர். இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பெருமளவில் பங்கேற்றனர்.
குறிப்பாக பெண்களின் ஈடுபாடு பல இடங்களில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. சில கிராமப்புறங்களில் 90% மேற்பட்ட வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இது ஜனநாயகத்தின் மீது மக்களின் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் மீது மக்கள் அதிருப்தி அதிகரித்திருப்பதாலேயே இத்தகைய வாக்குப்பதிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
“தேர்தல் அமைதியாக நடைபெற இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், மேற்கு வங்க காவலர்கள் குழுவிற்கும் பாராட்டுகள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் தேர்தல் நடைபெற்றுள்ளது என்பது ஜனநாயகத்துக்கு நல்ல அறிகுறி” என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும், “அங்கம், வங்கம், கலிங்கம் ஆகிய பகுதிகளும் விரைவில் பாஜக ஆட்சிக்குள் வரும். மேற்கு வங்காளத்தில் கிடைக்கும் வெற்றி, கிழக்கு இந்தியாவின் அரசியல் திசையை மாற்றும் முக்கிய கட்டமாக அமையும்” என நம்பிக்கை வெளியிட்டார்.“பாஜக ஆட்சி அமைந்தபின், பெண்கள் இரவு நேரங்களிலும் பாதுகாப்பாக சுதந்திரமாகச் செல்லும் சூழல் உருவாகும்.
வங்கப் பெண்களுக்கு பாதுகாப்பும், அச்சமற்ற வாழ்க்கையும் வழங்குவது எங்களின் முதன்மை நோக்கம்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
BJP change old history Lotus bloom all three Angam Bengal Kalingam Amit Shah takes action