ஆம் ஆத்மிக்கு 'பிக் ஷாக்'! ராகவ் சத்தா அதிரடி விலகல்...! - பாஜகவில் இணையப் போவதாகத் தகவல்...! - Seithipunal
Seithipunal


ஆம் ஆத்மி கட்சியின் இளம் தலைமுறை முகமாகத் திகழ்ந்த ராகவ் சத்தா, மாநிலங்களவை துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்த நிலையில், கடந்த வாரம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு மாற்றாக, அசோக் மிட்டல் புதிய துணைத் தலைவராக கட்சி தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் 2024ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட காலகட்டத்தில், கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டங்களில் ராகவ் சத்தா பங்கேற்காதது கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், மதுபான ஒதுக்கீட்டு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் அவர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்காமல் இருந்ததும், நாடாளுமன்றத்தில் கட்சியின் நிலைப்பாடுகளை வலியுறுத்தாததும் விமர்சனங்களுக்கு இடமளித்தது.

இந்த பின்னணியிலேயே, மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இதனையடுத்து, அரசியல் திருப்பமாக, ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன், பாரதிய ஜனதா கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். “ஊழலை ஒழிக்க உருவான கட்சி இன்று தானே ஊழலில் சிக்கியுள்ளது” என அவர் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மாநிலங்களவை உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் தங்களுடன் இருப்பதாகவும், மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் ஆதரவு தங்களுக்கு உள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதே நேரத்தில், ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்வாதி மலிவால் ஆகியோரும் ராகவ் சத்தாவுடன் இணைந்து பாஜகவில் சேர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், மூத்த எம்.பி.க்களான அசோக் மிட்டல் மற்றும் சந்திப் பட்நாயக் ஆகியோரும் அவருடன் தோன்றி கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த அரசியல் மாற்றம் தேசிய அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aam Aadmi Party gets big shock Raghav Chadha sudden resignation News that he join BJP


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->