வீடியோ கேம் கற்றுத் தருவதாக 05 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 05 மரண தண்டனையுடன், 04 ஆயுள் தண்டனையுடன் கூடிய 22 ஆண்டு சிறை..! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் சுற்றுவட்டாரத்தில் சிங்கம்புணரியில் 05 சிறுமிகளை வீடியோ கேம் கற்றுத் தருவதாக அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 04-ஆம் தேதி திருப்பத்தூர் மகளை காவல் நிலையத்தில் சந்திரன் என்பவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் சிங்கம்புணரியை சேர்ந்த சந்திரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 02 ஆண்டுகளாக இதுதொடர்பாக நடந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று இவ்வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட்டுள்ள நிலையில், 05 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சந்திரனுக்கு 05 மரண தண்டனையுடன் 04 ஆயுள் தண்டனை, 22 ஆண்டு சிறை விதித்து சிவகங்கை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட 05 சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் வழங்க நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

22 Years in Prison Including 5 Death Sentences for the Convict Who Sexually Assaulted 5 Young Girls


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->