அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்… பொய் நகை திருட்டு புகார் அளித்த நிகிதா மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்...! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பக்தர்களின் பெரும் நம்பிக்கையை பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் கோவிலில் பணியாற்றி வந்த காவலாளி அஜித் குமார் மீது, கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிகிதா என்ற பெண் நகை திருட்டு குற்றச்சாட்டு பதிவு செய்தார்.

அந்த புகாரைத் தொடர்ந்து திருப்புவனம் தனிப்படை காவலர்கள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் விசாரணை பெயரில் காவலர்கள் தாக்கியதாக தெரிவிக்கப்படும் சூழலில் அஜித் குமார் கடுமையாக காயமடைந்து உயிரிழந்தது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த மரணம் பெரும் சர்ச்சையாக மாறியதால், மானாமதுரை தனிப்படை காவலில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) ஏற்று நடத்தி வருகிறது.

அண்மையில் சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில், நிகிதா அளித்த நகை திருட்டு புகார் பொய்யானது என்றும், காவல் விசாரணையின் போது அஜித் குமார் தாக்கப்பட்டதே மரணத்துக்குக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பொய் புகார் அளித்த நிகிதா மீதும் சட்டநடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது.இதன் அடிப்படையில், அஜித் குமார் கொலை வழக்கில் நிகிதாவை நேரில் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றம்த்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி இன்று காலை நிகிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். நீதிமன்ற உத்தரவின்படி, புகார் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் விரிவான விசாரணை நடத்த உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New twist Ajith Kumar death case Nikitha appears Madurai court after filing false complaint jewellery theft


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->