10 வயது மாணவிக்கு துன்புறுத்தல்…பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது ...! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மாநிலத்தின் தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள ஆனைமலையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 51 வயதுடைய சுதாகரன், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அன்னை நகரில் தங்கி, அஞ்செட்டி தாலுகா உரிகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

அவர்மீது, பள்ளியில் பயிலும் 10 வயது ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி இந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாணவியின் தாய் குழந்தைகள் அவசர உதவி எண்ணிலும், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் நிலையத்திலும் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமையாசிரியர் சுதாகரனை கைது செய்தனர்.

மேலும், இவர்மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், கடந்த டிசம்பர் மாதமே இந்தப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Harassment 10 year old student School principal arrested under POCSO What happened


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->