VIDEO: தொலைக்காட்சி விவாதத்தில் பாஜகவினர் மீது தி.மு.க கூலிப்படை தாக்குதல் -
dmk attack bjp member in tv show
பாஜக மாநில இளைஞரணி தலைவர் சூர்யா விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் திராணியில்லாத தி.மு.க-வினர், தொலைக்காட்சி விவாதத்தில் வன்முறையைக் கையில் எடுத்துள்ளனர். என் மீதும், என்னைக் காக்கச் சென்ற 20-க்கும் மேற்பட்ட இளைஞரணி சொந்தங்கள் மீதும் தி.மு.க கூலிப்படை நடத்திய கொலைவெறித் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
சட்டம் ஒழுங்கு சீர்குலைவின் உச்சக்கட்டம் இது. எழும்பூர் தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் விவாதம் முடிந்ததும், நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் முன்னிலையிலேயே இந்தத் தாக்குதல் முயற்சி நடந்துள்ளது.
'நாங்கள் 10 நிமிடங்கள் மின் இணைப்பைத் துண்டிக்கிறோம், நீங்கள் கிளம்புங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்று குண்டர்கள் போலீசாரிடமே கூறிவிட்டுத் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியளிக்கிறது. சொன்னபடியே 10 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, திட்டமிட்டு இந்த வன்முறை அரங்கேற்றப்பட்டுள்ளது.
காவல்துறையின் முழு உடந்தையுடன் நடந்த இந்தத் தாக்குதல், கருத்து சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட போர். குண்டர்களை ஏவிவிட்டு அரசியல் செய்யும் தி.மு.கவின் போக்கு ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.
பாதிக்கப்பட்ட எங்கள் இளைஞரணி சொந்தங்களின் சிந்திய ரத்தத்திற்கு இந்த விடியா அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
dmk attack bjp member in tv show