'பராசக்தி' படத்திலிருந்து நீக்கப்பட்ட அண்ணாவின் வசனம்: படக்குழு வெளியிட்ட புரோமோ!
Parasakthi Deleted Scene Promo Annas Iconic Dialogue Goes Viral
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படம் நாளை (ஜனவரி 10, 2026) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
1964-ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களைப் பின்னணியாகக் கொண்ட இப்படத்தில், தணிக்கை வாரியம் பல முக்கியக் காட்சிகளுக்குக் கத்தரி போட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய நீக்கப்பட்ட வசனம்:
இப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவாக நடிகர் சேத்தன் நடித்துள்ளார். அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையான, "அச்சம் இருக்கும் வரையில் இங்கு யார் ஆண்டாலும் அண்ணா துரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்" என்ற வசனத்தை தணிக்கை வாரியம் நீக்கியிருந்தது. இது அண்ணா அறிஞர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
படக்குழுவின் அதிரடி புரோமோ:
தியேட்டரில் திரையிடப்படும் பதிப்பில் இக்காட்சி இடம்பெறாத நிலையில், அந்த நீக்கப்பட்ட அண்ணாவின் வசனத்தைக் கொண்ட புதிய புரோமோ வீடியோவை படக்குழு இன்று (ஜனவரி 9) இணையத்தில் வெளியிட்டுள்ளது.
English Summary
Parasakthi Deleted Scene Promo Annas Iconic Dialogue Goes Viral