‘ஜன நாயகன்’க்கு நீதிமன்ற கிரீன் சிக்னல்...! - தணிக்கை தடையை உடைத்த விஜய் படம்
Jananaayagan gets court green signal Vijay film breaks censorship barrier
நடிகர் விஜய் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘ஜன நாயகன்’ தணிக்கை சிக்கலில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், அதை மறுஆய்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது.
இந்த முடிவை எதிர்த்து, படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவைத் தட்டியது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, இருதரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டார்.

மேலும், தணிக்கை வாரியம் தரப்பில், படத்தில் பாதுகாப்புப் படைகள் தொடர்பான சின்னங்கள் இடம்பெற்றுள்ளதால், அவற்றை ஆய்வு செய்ய பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தேவைப்படுவதாகவும், அதற்குமுன் தணிக்கை சான்று வழங்க முடியாது என்றும் வாதிடப்பட்டது.
இதற்கு தயாரிப்பு நிறுவனம் தரப்பில், தணிக்கை நடைமுறையில் தேவையற்ற தாமதம் ஏற்படுத்தப்படுவதாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இந்த விசாரணை முடிவில் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி, நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
அதன்படி, இன்று வெளியான தீர்ப்பில், ‘ஜன நாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் மூலம், நீண்ட நாட்களாக நீடித்த தணிக்கை குழப்பம் முடிவுக்கு வந்து,'ஜன நாயகன்’ வெளியீட்டுக்கு பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது.ரசிகர்கள் மத்தியில் இப்போது ஒரே கொண்டாட்டம்!
English Summary
Jananaayagan gets court green signal Vijay film breaks censorship barrier