விஜய்க்கு வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா? குஷ்பு கேள்வி..!
Khushbu questioned whether all the crowds that gather for Vijay would translate into votes
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 09-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் நாளை காலை ஒத்திவைத்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததற்கு காரணம் பாஜக தான் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. அதாவது, கூட்டணிக்கு விஜய்யை இழுக்கவே பாஜக இவ்வாறு சதி செய்கிறது என்று விமர்சங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக நிர்வாகியான நடிகை குஷ்பூ, "விஜய் மிகப்பெரிய நடிகர் என்பதால் அவரை பார்க்க கூட்டம் வரதான் செய்யும். ஆனால், அதெல்லாம் தேர்தலில் ஓட்டாக மாறுமா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதால் மேலும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Khushbu questioned whether all the crowds that gather for Vijay would translate into votes