மேலப்பாளையத்தில் போதைப் பொருள் வேட்டை...! - 4.5 கிலோ கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது!
Drug raid Melapalayam 4point5 kg ganja seized 3 arrested
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மேலப்பாளையம் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே நேற்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சிலரை கவனித்த போலீசார் அவர்களை அணுக முயன்றனர். இதைக் கண்டவுடன் மேலப்பாளையத்தைச் சேர்ந்த பீர் முஹம்மது என்பவர் திடீரென தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து அங்கிருந்த மற்ற நபர்களை போலீசார் சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் ராசப்பன் (கிருஷ்ணன் மகன்),முஹம்மது ஹுசைன் (பஷீர் மகன்),முஹம்மது பாதுஷா (அக்பர் அலி மகன்) என திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இந்த சோதனையில், அவர்களிடம் இருந்து சுமார் 4.5 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.மேலும், தப்பி ஓடிய பீர் முஹம்மதுவை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Drug raid Melapalayam 4point5 kg ganja seized 3 arrested