வங்கக்கடலில் புயல் அபாயம் இல்லை...! வானிலை ஆய்வு மையத்தின் திடீர் மாற்ற அறிவிப்பு...!
No cyclone threat Bay of Bengal sudden change forecast from meteorological department
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த நாட்களில் தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது.
இந்த வானிலை அமைப்பு மேலும் வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் வங்கக்கடலில் புயல் உருவாகும் வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில்,“தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறும் சாத்தியம் தற்போது இல்லை”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், முன்னதாக வெளியிடப்பட்ட புயல் எச்சரிக்கை அறிவிப்பையும் வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக திரும்பப்பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பு, கடலோர மக்கள் மற்றும் மீனவர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
No cyclone threat Bay of Bengal sudden change forecast from meteorological department