ஒரு ஸ்பூன் தேன் போதும்…மூட்டு வலி பறந்து போகும் அதிசயம்...! - இயற்கை மருந்தில் உள்ள சிறப்புகள்!
Just one spoon honey miracle that make joint pain go away benefits natural medicine
தமிழரின் பாரம்பரிய மருத்துவத்தில் தேனுக்கு ஒரு தனி இடம் உண்டு. கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என இயற்கையின் பல்வேறு மலர்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் வகைகள் அறுபதுக்கும் மேல் இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு தேனும் தனித்தனி மணம், சுவை மட்டுமல்லாமல், தனித்துவமான மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

தேன் ஒரு சாதாரண இனிப்பு அல்ல; அது இயற்கை வழங்கும் சக்தி உணவாகும். ஒரு ஸ்பூன் தேன் எடுத்துக் கொண்டால், அரை மணி நேரத்திலேயே நரம்புகள் புத்துணர்ச்சியுடன் செயல்படத் தொடங்கும்.
சிலருக்கு கை, கால், விரல்கள் அல்லது உடல் நடுக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிப்பது நல்ல பலனைத் தரும்.மூட்டு வலி அல்லது உடல் சோர்வு இருந்தாலும் தேன் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது.
வலி உள்ள இடத்தில் தேனை மெதுவாகத் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். அதோடு, உணவுக்குப் பிறகு ஒரு ஸ்பூன் தேன் உட்கொள்வது உடலுக்கு உற்சாகத்தையும் சக்தியையும் தரும்.
தொடர்ந்து தேன் பயன்படுத்தினால் மூட்டுகள் தேய்வது குறையும், வலிகள் கட்டுப்படும். நீண்ட நாட்களாக படுக்கையிலேயே இருப்பவர்கள்கூட பாலுடன் தேன் சேர்த்து அருந்தினால், உடலில் தெம்பு திரும்பி, சுறுசுறுப்பாக இயங்கும் நிலை விரைவில் ஏற்படும். இயற்கை தரும் இந்த இனிய மருந்து, ஆரோக்கிய வாழ்க்கைக்கான எளிய தீர்வாக திகழ்கிறது.
English Summary
Just one spoon honey miracle that make joint pain go away benefits natural medicine