ஜன நாயகன் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள்; முழு பணமும் ரீஃபண்ட்..! - Seithipunal
Seithipunal


ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 09-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் நாளை காலை ஒத்திவைத்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் வெளியாவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காத நிலையில் ஜன நாயகன் படம் ஒத்திவைக்கப்படுவதாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், ஜன நாயகன் படத்திற்காக திரையரங்குகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு முழுப் பணமும் திருப்பித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராம் சினிமாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 

அன்புள்ள ரசிகர்களே,

ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரும் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் உங்கள் ஏமாற்றத்தை நாங்கள் உண்மையிலேயே பகிர்ந்து கொள்கிறோம்.

ஜனவரி 09 மற்றும் 10-ஆம் தேதிகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு முழுப் பணமும் திருப்பித் தரப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆன்லைன் முன்பதிவுகள் (09 மற்றும் 10 ஆம் தேதி): பணத்தைத் திரும்பப் பெறுவது தானாகவே அசல் கட்டண முறைக்கு மாற்றப்படும்.

கவுண்டர் முன்பதிவுகள் (09 மற்றும் 10 ஆம் தேதி): பணத்தை நேரடியாக சென்று திரும்பப் பெறலாம். உங்கள் பொறுமை, புரிதல் மற்றும் தொடர்ச்சியான ஆதரவை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம்.'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Full refund for all ticket bookings of the Jananayagan film


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->