14-வது நாளாக நீடிக்கும் போராட்டம்..! சம்பளம் நிறுத்துவோம் என்ற அரசின் எச்சரிக்கை - எழும்பூரில் இடைநிலை ஆசிரியர்கள் கைது - Seithipunal
Seithipunal


‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறந்தாலும், ஆசிரியர்களின் போராட்ட உறுதி தளரவில்லை.அரசுடன் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், நேற்று ஆசிரியர்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர்.

இதற்கு பதிலடியாக, தொடக்கக் கல்வித்துறை போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்படும் என்று கடும் எச்சரிக்கை விடுத்தது. இந்த உத்தரவு கல்வித் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.அரசின் இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, இடைநிலை ஆசிரியர் போராட்டக்குழு கடும் பதிலடி அறிக்கை வெளியிட்டது.

அதில்,“இன்று சென்னையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கூட உள்ளனர் என்பதை அரசு உணர்ந்ததால்தான் இந்த அச்சுறுத்தல். இத்தகைய உத்தரவுகளை எதிர்பார்த்தே நாங்கள் களத்தில் இறங்கியுள்ளோம். மவுனமாக இருக்கும் அரசை அசைக்கவே இந்த போராட்டம்.

வெற்றி கிடைக்கும் வரை பின்வாங்கமாட்டோம்” என தெரிவித்தனர்.அறிவித்தபடி, இன்று சென்னை எழும்பூரில் இடைநிலை ஆசிரியர்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

14-வது நாளாக நீடித்த இந்த போராட்டம், எழும்பூர் பகுதியையே முற்றுகையிடும் சூழலை உருவாக்கியது. நிலைமை கட்டுக்குள் வராததால், போலீசார் ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் கடும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

protest continues 14th day Government warns withholding salaries Secondary grade teachers arrested Egmore


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->