உத்திரமேரூர் அருகே விபரீதம்; பைக்கில் அதிவேகமாக வந்த அரசு பஸ் கண்டக்டர் வேகத்தடையில் தவறி விழுந்து பரிதாப பலி..!
A government bus conductor who was speeding on a bike near Uthiramerur fell into a speed bump and died tragically
சென்னை மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஸ்டீபன் என்பவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தவர். இவரது மனைவி ஹேமமாலினி. இந்த தம்பதிக்கு 02 வயதில் ஒரு மகள் உள்ளார்.
ஸ்டீபனின் பாட்டி வீடு உத்திரமேரூர் அருகே வைப்பணை கிராமத்தில் உள்ளது. அதனால் பாட்டியை பார்த்து விட்டு வர நேற்று மாலை வீட்டில் இருந்து வைப்பணைக்கு பைக்கில் புறப்பட்டுள்ளார்.
இவர் உத்திரமேரூர் அடுத்த கம்மாளம்பூண்டி பகுதியில் வந்தபோது வேகத்தடை இருப்பது தெரியாமல் பைக்கில் வேகமாக சென்றுள்ளார். வேகத்தடையில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்த நிலையில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து உத்திரமேரூர் போலீசாரும் விரைந்த வந்த நிலையில், அதற்குள் ஸ்டீபன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
English Summary
A government bus conductor who was speeding on a bike near Uthiramerur fell into a speed bump and died tragically