டி 20 உலக கோப்பை; இந்திய அணியுடன் பலப்பரீட்சை நடத்த தயார்; ஜிம்பாப்வே பயிற்சியாளர் பேட்டி..!
Zimbabwe coach says he is ready to face India in a tough test
10 வது உலக கிண்ண டி 20 போட்டிகளில் இலங்கை மற்றும் இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் 05 வது சூப்பர் 08 போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி, இங்கிலாந்து அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனையடுத்து, குரூப் 01 இல உள்ள இந்தியா மற்றும் ஜிம்பாமே அணிகளுக்கிடையிலான சூப்பர் 8 சுற்று போட்டி நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா சவுத் ஆபிரிக்காவுடன் படு தோல்வி அடைந்த நிலையிலும், ஜிம்பாபே அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மிக மோசமாக படு தோல்வியுடன் களமிறங்கிபாவுள்ளன.
இந்நிலையில், இந்திய அணி உடனான சூப்பர் 08 போட்டியில், பலப்பரீட்சைக்கு தங்கள் அணி தயார் என ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் சமன்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

''நிச்சயம் இந்திய அணி எந்த வகையில் ஆட்டத்தை அணுகும் என்பதை நாங்கள் அறிவோம். கிட்டத்தட்ட மேற்கு இந்தியத் தீவுகள் அணி எப்படி இன்னிங்ஸை அணுகியதோ அது போலவே இந்தியாவும் ஆடும் என்றும், அதனால் எங்களுக்கு சிறந்த அனுபவம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அழுத்தமான சூழலை சமாளிப்பது எப்படி என்பதை அறிவோம் என்றும், அமைதியாக இருந்து எப்படி எதிரணி பேட்ஸ்மேனின் ரிதத்தை சற்று சிதைப்பது என்பதையும் முயற்சிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால், நாங்கள் கணிக்க முடிகின்ற அணியாக இருக்கிறோம் என்றும், அதில் நாங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், சென்னை மைதானத்தின் பெரிய அவுட்-பீல்ட் எங்களுக்கு உதவும் என கருதுகிறோம்” என ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில், அப்போதுதான் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு சின்னதான வாய்ப்பு வரும்.
English Summary
Zimbabwe coach says he is ready to face India in a tough test