சூப்பர் 8 சுற்று; ஹாரி புரூக்கின் அதிரடி சதம்: பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி..!
England defeats Pakistan and advances to the semi finals
10 வது டி20 உலகக்கோப்பை போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் முடிவடைந்து, சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றது. அதில் 05 வது சூப்பர் 08 போட்டி இன்று இலங்கை கண்டி பல்லேகல மைதானத்தில் இரவு 07:00 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில், பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் களமிறங்கியது.
அதன்படி, பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 09 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அணியின் சார்பில் ஷாகிப் ஜாதா பர்ஹான் அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் லியாம் டாசன் 03 விக்கெட்டும், ஜோப்ர ஆர்ச்சர், ஓவர்டன் தலா 02 விக்கெட்டும் வீழ்த்தினர்.

165 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 08 விக்கெட்டுகள் இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில், அதிகபட்சமாக அணியின் ஹாரி புரூக் 100 ரன்கள் (சதம்) எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அரையிறுதிக்குள் முதல் அணியாக நுழைந்துள்ளது. 35 ரன்களுக்குள் 03 விக்கெட்களை இழந்து போராடிய இங்கிலாந்து அணிக்கு தனி ஆளாகப் நின்று சதமடித்து கேப்டன் ஹாரி புரூக் போட்டியின் ஆட்டநாயகனானார்.
பாகிஸ்தான் அணி சார்பில், ஷாஹீன் அப்ரிடி 04 விக்கெட்டும், உஸ்மான் தாரிக் 02 விக்கெட்டும் வீழ்த்தினர்.
English Summary
England defeats Pakistan and advances to the semi finals