ஜனநாயகனைத் தொடர்ந்து பராசக்தி வெளியாவதிலும் சிக்கல்..? சென்சார் குறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் இல்லை..!
Following the release of Jananaayagan there are also problems with the release of Parasakti
சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தி படத்தை, சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயம் ரவி, அதர்வா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் டிரெய்லர் யூடியூபில் ஐந்து கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
தற்போது படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுவும் அதிகாரப்பூர்வ தகவலாக இன்னும் வெளியாகவில்லை. இதனால் இப்படமும் குறிப்பிட்ட தேதியில் வெளியாவதில் சிக்கல் நிலவுகிறது. ஏற்கனவே தணிக்கை சான்றிதழ் இழுபறியால் ஜனநாயகன் 09 ஆம் தேதி வெளியாகுமா என குழப்பம் நிலவி வருகிறது. தற்போது பராசக்தி படமும் சிக்கலில் உள்ளது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Following the release of Jananaayagan there are also problems with the release of Parasakti