ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்ற உதவாத நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளை கடுமையாக சாடியுள்ள ட்ரம்ப்..! - Seithipunal
Seithipunal


ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க, 'அங்கு போர் கப்பல்களை நிறுத்துங்கள்' என டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். அதற்கு நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவ மறுத்துள்ளது. இதற்கு அந்நாடுகளை ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்ற உதவுமாறு அமெரிக்கா அதிபர் டிரம்ப் விடுத்த கோரிக்கையை சீனா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்து இருந்தார்.

ஆனால், ஹோர்முஸ் நீரிணையை ஈரானிடம் இருந்து மீட்க உதவுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த அழைப்பை நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிராகரித்து விட்டது.

இது குறித்து தனது ட்ரூத் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் எஞ்சிய பகுதிகளை முற்றிலுமாக அழித்து, ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிக்கும் பொறுப்பை அதை பயன்படுத்தும் நாடுகளிடம் ஒப்படைக்க யோசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு வழங்காத கூட்டாளி நாடுகளை விரைவாக செயல்பட வைக்க அது உதவும் எனவும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trump harshly criticizes NATO and European nations for failing to assist in securing the Strait of Hormuz


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->