அசோக்நகரில் அடுத்தடுத்து அதிர்ச்சி...! அழகு நிலையப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது...!
Shocking incident Ashoknagar 3 people including college student arrested harassing beauty salon woman
சென்னை அசோக்நகர் பகுதியில் இரவு நேரத்தில் வீட்டுக்கு தனியாக நடந்து சென்ற அழகு நிலைய பெண்ணை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அசோக்நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல அழகு நிலையம் ஒன்றில் மேற்குவங்காளத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார்.

அப்பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருக்கும் அவர், தினமும் இரவு பணி முடிந்ததும் தனியாக வீட்டுக்கு நடந்து செல்வது வழக்கம்.அதேபோல் சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் பணியை முடித்துவிட்டு இளம்பெண் வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 3 பேர் திடீரென வழிமறித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக கூச்சலிட்டு உதவி கேட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்தனர்.
பொதுமக்கள் வருவதை பார்த்ததும் 3 பேரும் தப்பிச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அசோக்நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதையடுத்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அசோக்நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ராபின்நெல்சன் (22), கிருஷ்ணகுமார் (25), மனோகார்த்திக் (20) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.இதேபோல் அசோக்நகர் பகுதியில் 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக த.வெ.க. நிர்வாகி ஆனந்த் (29) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அசோக்நகர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இரு சம்பவங்கள் தொடர்பாகவும் காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Shocking incident Ashoknagar 3 people including college student arrested harassing beauty salon woman