அரசு மருத்துவமனைகளில் தொடரும் மருந்துத் தட்டுப்பாடு...! - உடனடியாக நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்குத் தேவையான உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். குழந்தைகளுக்கான அத்தியாவசிய மருந்துகள் தடையின்றி கிடைப்பதை தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு அடிப்படைத் தேவையாக விளங்கும் உயிர்காக்கும் மருந்துகளையே வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், சுகாதாரத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் அணிவித்து விளம்பரம் தேடுவதில் காட்டப்படும் அக்கறையை, அவர்களின் உயிரைக் காப்பதிலும் காட்ட வேண்டாமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பச்சிளம் குழந்தைகளின் சிகிச்சையில் சிறு தாமதம்கூட கவலைக்குரியதாக மாறக்கூடிய நிலையில், அவர்களுக்குத் தேவையான உயிர்காக்கும் மருந்துகள் மருத்துவமனைகளில் போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கான உயிர்காக்கும் மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தட்டுப்பாடின்றி கிடைப்பதை தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Continuing shortage medicines government hospitals Kanimozhi urges immediate action


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->