முதலமைச்சர் அரியாசனம்... இனி கருணாநிதியின் குடும்பத்திற்கு எக்காலத்திற்கும் எட்டாக்கனி - அதிமுக வெளியிட்ட வீடியோ!
ADMK Condemn to DMK MK Stalin woman safety
அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்ட பல்வேறு தரப்பட்ட மக்கள் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்க... தமிழகப் பெண்கள் அனைவரும் பாதுகாப்பின்றித் தவித்துக் கொண்டிருக்க...
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என ஒட்டுமொத்த தமிழகமே அச்சத்தில் உறைந்து கிடக்க... போதைப் பொருட்களால் இளைய சமுதாயமே தள்ளாடிக் கொண்டிருக்க...
ரோம் நகர் பற்றி எரியும் போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல, மக்கள் கண்ணீரில் தவித்துக் கொண்டிருக்கும் போது போட்டோ ஷூட்டை நேசித்துக் கொண்டிருக்கும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் தங்கள் வாக்குகளால் சவுக்கடி கொடுப்பார்கள்!
திமுக ஆட்சியை மட்டுமல்ல, திமுக என்ற கட்சியையே தமிழக மக்கள் முற்றுமுதலாகப் புறக்கணிப்பார்கள். முதலமைச்சர் அரியாசனம் என்பது இனி கருணாநிதியின் குடும்பத்திற்கு எக்காலத்திற்கும் எட்டாக்கனி" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK Condemn to DMK MK Stalin woman safety