சாத்தான்குளம் லாக்கப் மரணத்திற்காக போராட்டம் நடத்திய திமுக ஆட்சியில் இதுவரை 34 லாக்கப் மரணங்கள்; நயினார் நாகேந்திரன்..! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:

இன்னும் இரண்டு தினங்களில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வரவுள்ள நிலையில் அவரிடம், பேச்சுவார்த்தை நடத்தீய பிறகு ஏனைய விஷயங்கள் உறுதி செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதிமுக விரும்பிய தொகுதிகளை பாஜக விருப்பப்பட்டு கேட்பதில் தவறு ஏதும் இல்லையே என்றும், தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதா என்பதற்கான பதிலை நான் ஏற்கனவே பலமுறை கூறிவிட்டேன். இதனை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று தெரிவிடுத்துள்ளார்.

மேலும் சாத்தான்குளம் லாக்கப் மரணத்திற்கு திமுக போராட்டம் நடத்தியது. ஆனால், திமுக ஆட்சியில் தற்போது 34 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன என்று நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nainar Nagendran states that 34 custodial deaths have occurred so far under the DMK regime


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->