2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்; மூன்று காங்கிரஸ் சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாட்டாஹங்கே உள்ளது. இதனை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) தமிழகத்திற்கான சிறப்புப் பார்வையாளர்களை (Special Observers) நியமித்துள்ளது.

அதில், முகுல் வாஸ்னிக், உத்தம் குமார் ரெட்டி, முகமது நிஜாமுதீன் ஆகியோரை சிறப்பு பார்வையாளர்களாக காங்கிரஸ் நியமித்தது.

01- முகுல் வாஸ்னிக் : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர். 

02- உத்தம் குமார் ரெட்டி: தெலுங்கானா மாநில அமைச்சர் மற்றும் மற்றும் முன்னாள் பி.சி.சி தலைவர்.

03- முகமது நிஜாமுதீன் : பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவர். 

தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகள் 2026 தேர்தலில் களமிறங்கவுள்ளது. இதனால் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ளவும், கூட்டணியில் வலுவான இடத்தைப் பிடிக்கவும் இந்த நியமனங்கள் முக்கியமான முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றன. ஏற்கனவே, கிரிஷ் சோடங்கர் (Girish Chodankar) தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளராக இருக்கும் நிலையில், இந்த மூவர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three special observers have been appointed by the Congress party for the 2026 Tamil Nadu Assembly elections


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->