விஜய் ஹசாரே தொடர்; அதிக சிக்ஸர்கள் பறக்கவிட்ட வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்..!
Ruturaj Gaikwad has created a historical record as the player who hit the most sixes in the Vijay Hazare Trophy
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில், ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி முதலில், பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 07 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில், ருதுராஜ் கெய்க்வாட் 06 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் பறக்கவிட்ட வீரர் என்ற வரலாற்று சாதனையை ருதுராஜ் படைத்துள்ளார்.
மொத்தமாக 112 சிக்ஸர்களை விளாசியுள்ள, ருதுராஜ் கெய்க்வாட்க்கு, அடுத்த இடங்களில் 108 சிக்ஸர்களுடன் மணிஷ் பாண்டே, விஷ்ணு வினோத் ஆகியோர் உள்ளனர்.
English Summary
Ruturaj Gaikwad has created a historical record as the player who hit the most sixes in the Vijay Hazare Trophy