மத்திய அரசின் விபி- ஜி ராம் ஜி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்..! - Seithipunal
Seithipunal


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பெயரை மாற்றியதை கண்டித்தும், விபி- ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்,  மத்திய அரசுக்கு எதிராக, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அத்துடன், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகைகத்பட் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், நிர்வாகிகள், துணை அமைப்பு நிர்வாகிகள், பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Congress party members staged a protest against the Central governments VP G Ramji scheme


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->