நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகள்; முதல் 03 போட்டிகளில் இருந்து விலகிய திலக் வர்மா..!
Tilak Varma has been ruled out of the first three T20 matches against New Zealand
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கு 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 05 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.
இதில், ஒருநாள் போட்டி தொடர் வரும் 11-ந் தேதி தொடங்கவுள்ளது. டி20 தொடர் வரும் 21-ந் தேதி தொடங்கவுள்ளது. 5 டி20 போட்டிகளும் நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் 03 டி20 போட்டிகளில் இருந்து இந்தியாவின் அதிரடி வீரரான திலக் வர்மா விலகியுள்ளார். வயிற்றுப் பிரச்சனைக்காக ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்று காலை மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், தற்போது உடல்நிலை சீராகவும், நல்ல முன்னேற்றத்துடனும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மீதமுள்ள 02 டி20 போட்டிகளில் திலக் வர்மா பங்கேற்பது பயிற்சி மற்றும் திறன் நிலைகளுக்குத் திரும்பும் போது அவரது முன்னேற்றத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
English Summary
Tilak Varma has been ruled out of the first three T20 matches against New Zealand