தேர்தல் விதிமுறை மீறல்; '1 லட்சத்துக்கு மேல் பணம் வரவு அல்லது எடுக்கப்பட்டால் தீவிர கண்காணிப்பு; ஜிபே, போன்பே-வும் கண்காணிக்க வேண்டும்'; வங்கி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு..!
Strict orders issued to bank employees mandating intense surveillance on any cash deposits or withdrawals exceeding rs1 lakh during the election period
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 05 மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் சடைபெறவுள்ளது. நேற்று முன் தினம் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த 05 மாநிலங்களிலும் தேர்தல் சட்ட திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது.
அதன் படி, தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கவும், நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவும், வங்கிக் கணக்குகளைக் தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்கிகள் தங்கள் கிளையில் நடக்கும் சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 02 மாதங்களாக எந்த பரிவர்த்தனையும் இல்லாத வங்கிக் கணக்கில் திடீரென 01 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வரவு வைக்கப்பட்டாலோ எடுக்கப்பட்டலோ அதனை கண்காணிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் உள்ள பல நபர்களின் கணக்குகளுக்கு, ஒரே கணக்கிலிருந்து RTGS மூலம் அதிகப்படியான பணம் அனுப்பப்பட்டாலும் அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களின் கணவர் அல்லது மனைவி மற்றும் சார்ந்திருப்பவர்களின் வங்கிக் கணக்குகளில் 1 லட்ச ரூபாய்க்கு மேல் நடக்கும் அனைத்துப் பணப் பரிமாற்றங்களையும் தணிக்கை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்குகளில் 1 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தாலோ அல்லது பணம் எடுத்தாலோ அது தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்து வங்கிகள் தெரிவிக்காமல் தேர்தல் நடத்தும் அலுவலர் கண்டறிந்தால் வருமான வரி துறை மூலம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Strict orders issued to bank employees mandating intense surveillance on any cash deposits or withdrawals exceeding rs1 lakh during the election period