'தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாறை தளபதி விஜய் படைப்பார்'; தவெக கூட்டத்தில் செங்கோட்டையன் உறுதி..!
Sengottaiyan asserts that Vijay will create history as Tamil Nadus permanent Chief Minister
“தளபதி விஜய் தமிழக முதல்வராக வரலாறு படைப்பார்” என சென்னை கொளத்தூரில் தவெக சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: 1972-இல் இருந்து எம்ஜிஆர் உடன் பயணித்து 26 வயதில் சட்டமன்ற உறுப்பினர் ஆனேன். ஆனால், ஒரே நொடியில் என்னை தூக்கி எறிந்து விட்டார்கள் என்னை தாங்கி பிடித்தவர் தளபதி விஜய் தான் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
அத்துடன், நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது நடிகர் ரஜினிகாந்த் சிறந்த அமைச்சராக இருந்தீர்கள் என பாராட்டியுள்ளதாகவும், நாளை தமிழகத்தை ஆளப்போவது தளபதி விஜய் தான் என்று நாட்டு மக்களுக்கு தெரியும்.

எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாறை படைத்தார். அதேப்போல நாளை தமிழகத்தை ஆளும் தளபதி விஜய் மூலமாக அந்த வரலாற்றை படைப்போம் என்று உறுதியுடன் பேசியுள்ளார்.
அத்துடன், விஜய் முதல்வர் ஆன பிறகு அடுத்து அவர்தான் நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றை படைப்போம் என்று குறிப்பிட்டதோடு, 'என் சட்டையில் அம்மா புகைப்படத்தை வைத்திருந்தேன். பிறகு தலைவர் விஜய் படத்தை மாற்றினேன். வேலூர் பிரச்சாரத்தில் அதை கவனித்து, அடுத்த நாள் என்னை அழைத்து நீங்கள் அம்மா புகைப்படத்தை சட்டையில் வைத்துக் கொள்ளுங்கள் என்றவர் விஜய். அதுதான் எனக்கு மகிழ்ச்சியும் கூட என்றார். எந்த தலைவன் இப்படி சொல்ல முடியும்.' என்று விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் ஒரே தூய தலைவன் என்றால் அது விஜய் மட்டும் தான் என்றும், தவெகவில் சேர்ந்த பிறகு இன்றைக்கு 20 வயது குறைந்துள்ளதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு பாதுகாப்பு தமிழகத்தில் இல்லை, பள்ளி கல்லூரிக்கு செல்பவர்களுக்கு கூட போதை பொருட்கள் கிடைக்கிறது. வழக்கமாக காலை 07 மணிக்கு மேல் வாக்கு செலுத்த செல்வார்கள். ஆனால், இந்த முறை காலை 04 மணிக்கு வாக்குச்சாவடிக்கு சென்று விடுவீர்கள். தளபதி தான் வெற்றி பெற்றார் என்பது வாக்கு செலுத்தும் நாளன்று 10 மணிக்கே தெரிந்து விடும். மே நான்கு வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நம்பிக்கையாக பேசியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், தமிழகத்திற்கு தூய்மையான ஆட்சி தேவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 15 ரூபாய் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கி குடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தளபதி விஜய்யின் ஆட்சி வந்த பிறகு எங்கு வேண்டுமானாலும் இலவசமாக தண்ணீர் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுத்த ஒரே தலைவர் நம் தலைவர் என்பதை மறந்து விட முடியாது. இந்தாண்டு தேசிய கொடியை ஏற்றுபவர் நம் தலைவர் தான் என்று மிக நம்பிக்கையாக தவெக வின் கொளத்தூர் கூட்டத்தில் செங்கோட்டையன் பேசியுள்ளார்.
English Summary
Sengottaiyan asserts that Vijay will create history as Tamil Nadus permanent Chief Minister