''உணர்வுக்கு மரியாதை கொடுக்கிறேன்''; “நடிகர் ரஜினியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா..!
TVK functionary Aadhav Arjuna publicly apologizes to actor Rajini
சமீபத்தில் நடந்த தவெக கட்சி கோட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நடிகர் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சையான கருத்தைத் பேசியிருந்தார். இதற்கு தமிழ்நாட்டின் பல அரசியல் தலைவர்களும், நிர்வாகிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். ரஜினி ரசிகர்களுக்கு பலத்த கண்டனத்தை தெரிவித்தனர்.
அத்துடன், நடிகர் ரஜினிகாந்தும் அது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர், "காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" எனத் குறிப்பிட்டு இருந்தார். அத்துடன், ஆதவ் அர்ஜுனா தன்னை பற்றி உண்மைக்கு மாறான கருத்தை தெரிவித்திருக்கிறார் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சென்னை கொளத்தூரில் தவெக சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அப்போது, ரஜினி ரசிகர் மன்ற முன்னாள் மாவட்டச் செயலாளர் அசோக் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், “நீங்கள் (ஆதவ் அர்ஜுனா) எந்த எண்ணத்தில் ரஜினிகாந்த் பற்றி அப்படி பேசினீர்கள் என்பதை விளக்கம் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என கேள்வி எழுப்பினார்.
இவரைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் குறித்து தான் பேசியதற்கு வருத்தமும், மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர் குறிப்பிட்டதாவது: 234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடுகிறது. 50-50, இரண்டரை வருட முதலமைச்சர் என பல ஆஃபர்களை தவெக தலைவர் விஜய்க்கு கொடுத்தார்கள். ஆனால், அனைத்து ஆஃபர்களையும் விஜய் நிராகரித்து விட்டார். மேலும், உண்மையான மதசார்பற்ற ஆட்சியை மக்கள் நாம் கொடுப்போம் என எங்களிடம் விஜய் கூறினார்.
தலைவர் ரஜினிகாந்த் அவர்களே உங்கள் மீது எங்களுக்கு வெறுப்பு கிடையாது, அன்பு மட்டும்தான் இருக்கிறது. ரஜினியை சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமோ, அல்லது பயந்துவிட்டார் என்பதையோ நான் சொல்லவில்லை. திமுகவின் சூழ்ச்சி என்றுதான் கூறினேன்.
நான் சொல்லவந்த நோக்கம் வேறு. நான் பேசியது உங்களுக்கு (ரஜினிகாந்த்) வருத்தத்தை கொடுத்திருந்தால், அதற்காக எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் பகிரங்கமாக கேட்டுக்கொள்கிறேன். வேறு யாருக்கும் பதில் கொடுக்க இங்கே வரவில்லை. ரஜினிகாந்த் அறிக்கையை படித்தேன். அவரது உணர்வுக்கு மரியாதை கொடுக்கிறேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
TVK functionary Aadhav Arjuna publicly apologizes to actor Rajini