'ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் எண்ணம் இல்லை'; ரிலையன்ஸ் நிறுவனம் திட்டவட்டம்..!
Reliance has categorically stated that it has no intention of importing crude oil from Russia
இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் 'நயாரா' என்ற பெயரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. குறித்த நிறுவனம் ரஷ்யாவின் முன்னணி கச்சா எண்ணெய் நிறுவனங்களான 'ரோஸ்நெப்ட்' மற்றும் 'லூக்காயில்' ஆகியவற்றிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது.
கடந்த 2025 -ஆம் ஆண்டில் ரஷ்யா கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்தது. அத்துடன் இந்தியா மீது 50 வீத பொருளாதார தடை விதித்தது. இதனால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை ரிலையன்ஸ் நிறுவனம் நிறுத்தியது. இருப்பினும் ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து ரஷ்ய நிறுவனங்களின் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதாக வெளிநாடுகளில் செய்திகள் வெளியாகியா வண்ணம் இருந்தன.
ஆனால், அதனை ரிலையன்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ''கடந்த 03 மாதங்களாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது கிடையாது. இந்த மாதத்திலும் (ஜனவரி) ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் எண்ணம் இல்லை'' என கூறப்பட்டுள்ளது.
English Summary
Reliance has categorically stated that it has no intention of importing crude oil from Russia