நல்லகண்ணு மறைவு - திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி!
Icons from Cinema & Politics Unite to Honor the People’s Leader
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், எளிமையின் சிகரமுமான தோழர் நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராயர் நகரிலுள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, அரசியல் மற்றும் திரையுலகத்தைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திரையுலகினரின் மரியாதை:
சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையுள்ள நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன் மற்றும் நாசர். இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் கவிஞர் வைரமுத்து மற்றும் பல திரையுலகப் பிரபலங்கள் இன்று நேரில் வந்து மறைந்த தலைவருக்குத் தங்களது ஆழ்ந்த மரியாதையைத் தெரிவித்தனர்.
அரசியல் தலைவர்கள் வருகை:
முன்னதாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
English Summary
Icons from Cinema & Politics Unite to Honor the People’s Leader