கள்ளக்காதலியைக் கொன்று மொட்டை மாடியில் வீசிய உறவினர்: சென்னை ராமாபுரத்தில் பரபரப்பு!
Tragic End to Extramarital Affair Woman Beaten to Death by Relative in Chennai
சென்னை ராமாபுரம், செந்தமிழ் நகரைச் சேர்ந்த புஷ்பா (37), தனது கணவரைப் பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக மகளுடன் வசித்து வந்தார். நேற்று காலை வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்ற அவரது மகள், முகம் மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் தாய் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்தபோது, புஷ்பா ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
விசாரணை: அம்பலமான ரகசிய உறவு
ராமாபுரம் போலீசார் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், புஷ்பா அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் சந்தேகத்தின் பேரில் அவரது உறவினரான மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளி கார்த்திக் (34) என்பவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர்.
புஷ்பாவிற்கும் கார்த்திக்கும் இடையே நீண்ட காலமாகத் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு புஷ்பாவின் வீட்டுக்கு வந்த கார்த்திக், அவருடன் மொட்டை மாடியில் தனியாகப் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
கொலைக்கான பின்னணி
அப்போது இருவருக்கும் இடையே திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற கார்த்திக், புஷ்பாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த புஷ்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கார்த்திக் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
English Summary
Tragic End to Extramarital Affair Woman Beaten to Death by Relative in Chennai