பாலியல் வன்கொடுமைகள், போதை பொருள்... ஸ்டாலின் மேடையிலேயே பிரேமலதா விஜயகாந்த் பேச்சு... அதிமுக வெளியிட்ட வீடியோ!
DMDK premaladha law and order DMk Mk Stalin ADMK Viral video
அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஸ்டாலின் ஆட்சி பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆக்கிவிட்டதையும், போதைப் பொருள் புழக்கம் கட்டுப்படுத்த தவறியதையும் ஸ்டாலின் இருக்கும் மேடையிலேயே வைத்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
தமிழகம் முழுக்க பெண்கள் நிம்மதியாக நடமாட முடியவில்லை. இளைஞர்கள் போதைப்பொருளால் சீரழிவுக்கு ஆளாகின்றனர்.
மக்களின் வாழ்க்கை, உயிர் இந்த தேர்தலின் முதல் Priority. தமிழக மக்கள் தங்களைக் காக்க வாக்கு அளிக்க உள்ளார்கள்.
வேறு என்ன குறை சொல்ல முடியும்? என்ற பிரேமலதா அவர்களின் கேள்விக்கு பல்வேறு பதில்கள் இருந்தாலும், ஒரு பெண் தலைவராக உள்ள அவர், பெண்கள் பாதுகாப்பை விட வேறென்ன முக்கியமான விஷயம் ஒரு தேர்தலுக்கு இருக்க முடியும் என்பதைக் கூற வேண்டும்!
தன் கூட்டணி கட்சித் தலைவர் அளித்துள்ள இந்த ஒப்புதல் வாக்குமூலம் பற்றி பேச ஸ்டாலினுக்கு தெம்பு, திராணி, வக்கு, வகை இருக்கிறதா?
தமிழ்நாடு வாழ திமுக வீழ வேண்டும்
நல்லாட்சினா எடப்பாடியார் தான்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
DMDK premaladha law and order DMk Mk Stalin ADMK Viral video