எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டு; இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 09 பேருக்கு ரூ.6.52 லட்சம் அபராதம்: தவறினால் 06 மாத சிறைத்தண்டனை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆகஸ்ட் 12 அன்று கடலுக்குச் சென்ற வெலிங்டன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

அந்த படகில் இருந்த ஆரோக்கிய ஜனதன், அந்தோணி பிச்சை, டான்போஸ்கோ, பிரபு, ஆரோக்கிய டெவின், வேலுச்சாமி, சுப்பையா, ஆரோக்கிய ஜெனிஸ்டன், ஸ்டெவின் ஆகிய 09 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று மன்னார் மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சிறைப் பிடிக்கப்பட்ட 09 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். அதனபடி, குறித்த மீனவர்களுக்கான காவல் இன்று நிறைவடைந்ததை தொடர்ந்து 09 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த ஊர்காவல் துறை நீதிபதி, 09 மீனவர்களுக்கு தலா இலங்கை ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். (மீனவர்களுக்கும் மொத்த அபராதம் இலங்கை ரூ.22 லட்சம் லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இதன் இந்திய மதிப்பு ரூ.6 லட்சத்து 52 ஆயிரம் ஆகும்.)

குறித்த அபராத தொகையை மீனவர்கள் கட்ட தவறும் பட்சத்தில் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அபராதம் விதிக்கப்பட்டுள்ள 11 மீனவர்கள் அபராதத் தொகையை செலுத்தியதும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A Sri Lankan court has imposed a fine of Rs 652000 on nine Tamil Nadu fishermen currently held in a Sri Lankan prison


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->