தொகுதி பங்கீடு, கூட்டணி ஆட்சி, 20 அமைச்சர்கள்... புயலை கிளப்பும் நயினார் நாகேந்திரனின் அதிரடிப் பேச்சு!
20 Ministers to Join BJP Nainar Nagendran Reveals Poll Strategy Ahead of PM Modi Visit
சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பா.ஜ.க பணிமனை திறப்பு விழாவில் பங்கேற்ற மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களிடம் கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணிக் குறித்துப் பேசியதாவது,
பிரதமர் வருகையும் பேச்சுவார்த்தையும்: சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக வரும் மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவரது வருகைக்குப் பின்னரே அ.தி.மு.க-வுடன் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும். எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் தெளிவுபடுத்தினார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை தமிழகம் வருவதாகவும், அ.தி.மு.க-வுடன் உடனே பேச்சுவார்த்தை நடக்கும் என்றும் வெளியான தகவல்களை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
அரசியல் அதிரடி: "தமிழகத்தில் விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலரும். எம்.ஜி.ஆர் வழியில் மக்களுக்காகப் பணியாற்றும் பா.ஜ.க-வில் 20 அமைச்சர்கள் வருவார்கள் என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்ற பிரச்சனையே இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
20 Ministers to Join BJP Nainar Nagendran Reveals Poll Strategy Ahead of PM Modi Visit