தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி: 2 நாள் சுற்றுப்பயணம்; மதுரையில் பொதுக்கூட்டம்!
PM Modis 2Day Visit to TN Puducherry Temple Visit and Madurai Rally
பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
சுற்றுப்பயண விவரம்:
பிப். 28 (சென்னை): அன்று இரவு தனி விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர், கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
மார்ச் 1 (புதுச்சேரி & மதுரை): காலையில் ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து மதுரை செல்லும் அவர், அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
ஆன்மிக தரிசனம்: மதுரையில் புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குச் சென்று பிரதமர் தரிசனம் செய்கிறார். சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அன்று இரவே டெல்லி புறப்படுகிறார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
பிரதமர் வருகையை முன்னிட்டுச் சென்னை மீனம்பாக்கம் மற்றும் கிண்டி பகுதிகள் 'சிவப்பு மண்டலமாக' (Red Zone) அறிவிக்கப்பட்டுள்ளன; இப்பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்த பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படை (SPG) அதிகாரிகள், விமான நிலையம் மற்றும் ஆளுநர் மாளிகை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரையில் பிரதமர் நிகழ்த்தப்போகும் உரை அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
PM Modis 2Day Visit to TN Puducherry Temple Visit and Madurai Rally