பிப்ரவரி 01 ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல்; நாடாளுமன்ற குழு பரிந்துரை; சாதனை படைக்கும் நிர்மலா சீதாராமன்..? - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ந்தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி காலை 11 மணிக்கு தாக்கல் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் விடுமுறை என்பதால் அரசு அலுவலங்களும், பங்கு சந்தைகளும் மூடப்பட்டிருக்கும். அத்துடன், அன்று குரு ரவிதாஸ் ஜெயந்தி தினமும் வருகிறது. இதனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் ஆகுமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சூழலில், இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் இன்று ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், நிதி அமைச்சராக பத்தி வகிக்கும் காலத்தில் தொடர்ச்சியாக 09 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The parliamentary committee has recommended that the Union Budget be presented on February 1st


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->