ஓபிஎஸ் பக்கம் சாய்ந்த முக்கிய புள்ளிகள்! எடப்பாடி பழனிச்சாமி விடுத்த முக்கிய அறிவிப்பு!
AIADMK Edappadi Palanisami Announce 27092023
ஓபிஎஸ்-க்கு ஆதரவாக 5 மாவட்ட செயலாளர்கள் சென்றதால், ஓராண்டுக்கும் மேலாக காலியாக இருந்த மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்த அந்த அறிவிப்பில், "கன்னியாகுமரி கிழக்கு, திருச்சி மாநகர், பெரம்பலூர் மற்றும்
தஞ்சாவூர் கிழக்கு, தஞ்சாவூர் மத்திய மாவட்டங்கள் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் J. சீனிவாசன் அவர்களும்,
பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன், Ex. M.L.A., அவர்களும்,
தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம், காவிரி பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ராம. ராமநாதன், Ex. M.L.A., அவர்களும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

கன்னியாகுமரி கிழக்கு, திருச்சி மாநகர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்களாகவும்; தஞ்சாவூர் கிழக்கு, தஞ்சாவூர் மத்தியம் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகரக் கழகச் செயலாளர்களாகவும் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
மாவட்டச் செயலாளர்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகம்
N. தளவாய்சுந்தரம், B.Sc., B.L., M.L.A., அவர்கள் (கழக அமைப்புச் செயலாளர்,
முன்னாள் அமைச்சர்)
திருச்சி மாநகர் மாவட்டக் கழகம்
J.சீனிவாசன் அவர்கள் (திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர்)
பெரம்பலூர் மாவட்டக் கழகம்
இளம்பை இரா. தமிழ்ச்செல்வன், M.A., Ex. M.L.A., அவர்கள்
(பெரம்பலூர் தொகுதி)
மாநகரச் செயலாளர்
தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம் கும்பகோணம் மாநகரக் கழகம்
ராம, ராமநாதன், M.Com., LLB., Ex. M.L.A., அவர்கள்
தஞ்சாவூர் மத்திய மாவட்டம் - தஞ்சாவூர் மாநகரக் கழகம்
மாநகரச் செயலாளர்
S. சரவணன் அவர்கள்
(மருத்துவக் கல்லூரி பகுதிக் கழக முன்னாள் செயலாளர்)
இவர்களுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த அறிவிப்பில் எடப்பாடி K. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
English Summary
AIADMK Edappadi Palanisami Announce 27092023