தேசிங்கு ராஜா 2 படம் எப்போது வெளியாகிறது? - வெளியானது மாஸ் அப்டேட்.!!
thesingu raja release date ipdate
'பசங்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் விமல். இவர் நடிப்பில் ஏராளமான படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில், விமல் நடிப்பில் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் 'தேசிங்குராஜா'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இந்தப் படம் முதல் பாகத்தில் இருந்து வித்தியாசமான கதைக்களத்திலும் முதல் பாகத்தைபோல் காமெடி கலந்த கதைக்களத்திலும் தயாராகி வருகிறது. இதில் விமல் உடன் குக் வித் கோமாளி புகழ், ரவி மரியா, ஹர்ஷிதா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை இன்பினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், வித்யாசாகர் இசையமைக்கிறார். இந்த நிலையில், தேசிங்கு ராஜா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தப் படம் வருகிற ஜூலை 11ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
English Summary
thesingu raja release date ipdate