தன் பெயர், புகைப்படம், குரல் மற்றும் ‘உலகநாயகன்’ பட்டத்தை பயன்படுத்தக் கூடாது! கோர்ட்டுக்கு போன ’உலக நாயகன்’ கமல்ஹாசன்! என்ன ஆச்சு?
His name photo voice and the title World Hero should not be used World Hero Kamal Haasan went to court What wrong
நடிகர் கமல்ஹாசன், தனது பெயர், புகைப்படம், குரல் மற்றும் “உலகநாயகன்” என்ற பட்டத்தை அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு, இன்று (ஜனவரி 12) விசாரணைக்கு வர உள்ளது. தற்போதும் எதிர்காலத்திலும் தனது அடையாளச் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படக் கூடாது என்பதே அவரது முக்கிய கோரிக்கையாகும்.
60 ஆண்டுகளுக்கும் மேலான திரைப் பயணத்தில் கடின உழைப்பால் பெற்ற புகழையும் தனி அடையாளத்தையும் பாதுகாப்பதற்காகவே இந்த சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளதாக கமல்ஹாசன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம், அவரது அனுமதியின்றி கமல்ஹாசனின் புகைப்படம் மற்றும் திரைப்பட வசனங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை விற்பனை செய்வது தனது நற்பெயருக்கும் ரசிகர்களின் நம்பிக்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கு ஒரே நிறுவனத்துக்கானதல்ல; எதிர்காலத்தில் யாரேனும் அவரது பெயர், புகைப்படம், குரல் அல்லது ‘உலகநாயகன்’ பட்டத்தை வணிக நோக்கில் பயன்படுத்தினால், அவர்களுக்கும் தடை பொருந்த வேண்டும் என பொதுவான தடை உத்தரவு வழங்குமாறு கமல்ஹாசன் நீதிமன்றத்தை கேட்டுள்ளார். சமூக வலைதளங்கள் மற்றும் ஏ.ஐ தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலில், பிரபலங்களின் அடையாள உரிமைகள் வணிகப் பொருளாக மாறி வரும் நிலையில், இந்த வழக்கு முக்கிய முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இசைஞானி இளையராஜா, பாலிவுட் நடிகர்கள் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் ஆகியோர் இதே போன்ற வழக்குகளில் தடை உத்தரவுகளைப் பெற்றுள்ள நிலையில், கமல்ஹாசனின் வழக்கும் அவரது அடையாள உரிமைகளை உறுதிப்படுத்தும் தீர்ப்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
English Summary
His name photo voice and the title World Hero should not be used World Hero Kamal Haasan went to court What wrong