செம்ம வைரல்!!! பிரதிப் ரங்கநாதனின் டியூட் படத்தின் செகண்ட் லுக்...!
second look of Pradeep Ranganathan Dude movie viral
இயக்குனர் 'பிரதீப் ரங்கநாதன்' நடிகராக தானே அறிமுகபடுத்திய 'லவ் டுடே' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து வெளியான படம் 'டிராகன் '. இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து, ''விக்னேஷ் சிவன்'' இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK )' என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அண்மையில், பிரதீப் ரங்கநாதனின் புதிய பட அறிவிப்பு வெளியானது.
அப்படத்தை சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் 'கீர்த்தீஸ்வரன்' இயக்குகிறார்.இதில் 'மமிதா பைஜு' கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் 'சாய் அபயங்கர்' இசையமைக்கிறார்.
மேலும், இப்படத்திற்கு 'டியூட் (DUDE )' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக்(FIRST LOOK ) வெளியாகி இருந்தநிலையில், தற்போது இதன் SECOND LOOK வெளியாகி இருக்கிறது. இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
second look of Pradeep Ranganathan Dude movie viral