பாலிவூட்டில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்: நடிகை ரியாவுக்கு மும்பை நீதிமன்றம் நோட்டீஸ்..! - Seithipunal
Seithipunal


பாலிவூட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் பாலிவூட் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி மும்பையின் பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 

அப்போது அவருடைய மரணம் நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுஷாந்தின் தந்தை, நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்குத் தூண்டியது மற்றும் நிதி மோசடி செய்ததாக பாட்னாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

குறித்த புகாரின் அடிப்படையில் ரியா உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதற்கு  பதிலடியாக, ரியா சக்ரபோர்த்தி, சுஷாந்தின் சகோதரிகளான பிரியங்கா சிங், மீட்டு சிங் மற்றும் மருத்துவர் ஒருவர் மீது, முறையான மருத்துவ மேற்பார்வையின்றி போலி மருந்துச் சீட்டு மூலம் சுஷாந்திற்கு மருந்துகள் வாங்கிக் கொடுத்ததாக புகாரை அளித்திருந்தார். 

இந்நிலையில், சுஷாந்த் சிங் மரண வழக்கை  மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), விசாரித்து வந்தது. இதன் போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த குற்றச் செயலும் கண்டறியப்படவில்லை என்று கூறி, தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்து வழக்கை முடித்து வைத்தது. இதையடுத்து, புகார்தாரரான நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குறித்த வழக்கை முடித்து வைக்கும் புலனாய்வு அமைப்பின் முடிவை எதிர்த்து, புகார்தாரர் தனது கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கும் சட்ட நடைமுறையின் பகுதியாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்குள் இதுகுறித்து பதிலளிக்குமாறு ரியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகை ரியாவின் பதிலுக்குப் பிறகே நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mumbai court issues notice to actress Rhea in connection with actor Sushant Singh death case


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->