விடுதி மாடியில் இருந்து மாணவி தற்கொலை முயற்சி - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!!
college student sucide attempt for ragging in rajasthan
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டோங்க் நகரில் பனஸ்தளி வித்யாபீடம் என்ற பெயரில் தனியார் கல்வி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மையம் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றதுடன் மாணவிகள் மட்டுமே படிக்க கூடிய கலாசாரத்துடன் கூடிய நவீன கல்வியை வழங்கும் நோக்கம் கொண்டுள்ளது.
இந்த நிலையில், இந்த கல்வி மையத்தின் விடுதி கட்டிடத்தில் இருந்து, எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பல்கலைக்கழக நிர்வாகம் சம்பவம் குறித்து அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். அதன் படி, அவர்கள் விரைந்து வந்து மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

உடனே போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மாணவிக்கு சக மாணவிகளால், போதை பொருள் கலந்த குளிர்பானம் மற்றும் கேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறியதுடன், வீடியோ எடுத்து தன்னை மிரட்டுகின்றனர் என்று கூறியது தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் குறித்த வீடியோ ஒன்றும் பரவி வருகிறது. அதில் அந்த மாணவியை மற்ற மாணவிகள் அடித்து, துன்புறுத்தியது உள்ளது. இதனால், அவருடைய மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளார்.
English Summary
college student sucide attempt for ragging in rajasthan