அமெரிக்காவின் வரிவிதிப்பு: வற்புறுத்தல் மற்றும் அழுத்தம் எதையும் சாதிக்காது: டிரம்பிற்கு அறிவுரை கூறிய சீனா..!
China Advises Trump That There Are No Winners in Tax Wars
ரஷ்யாவின் எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது 25 சதவீத வரிகளை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், சீனாவுக்கும் அதிக வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார். இதற்கு 'வரி விதிப்பு போர்களில் வெற்றியாளர்கள் யாரும் இல்லை' என டிரம்பிற்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.
அத்துடன், 'இந்த நேரத்தில் ரஷ்யா உக்ரைனில் நடத்தும் கொலைகளை நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள், எல்லாம் நல்லதல்ல' எனவும் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
-avmxd.png)
ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதை சீனா தொடர்ந்தால், வரிகளை கணிசமாக உயர்த்தும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். நமது தேசிய நலன்களுக்கு சேவை செய்யும் வகையில் சீனா எப்போதும் தனது எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்யும் என்றும், வரி விதிப்பு போர்களில் வெற்றியாளர்கள் யாரும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், வற்புறுத்தல் மற்றும் அழுத்தம் எதையும் சாதிக்காது எட்ன்றும், சீனா தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களை உறுதியாகப் பாதுகாக்கும் என்று சீனா வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
China Advises Trump That There Are No Winners in Tax Wars