மோசடி புகார்...பவர் ஸ்டார் மீண்டும்  கைது! - Seithipunal
Seithipunal


மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

நடிகர், மருத்துவர், நகைச்சுவை நடிகர், அரசியல்வாதி, தொழில் அதிபர் என பல முகங்களை கொண்டவர் தான் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் 2011ஆம் ஆண்டு வெளியான லத்திகா படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தை பவர் ஸ்டார் சீனிவாசனே தயாரித்திருந்தார். 

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானத்துடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, களம், சும்மா நச்சுனு இருக்கும், சக்கைப்போடுபோடு ராஜா, அல்டி, வாமனன், போர்க்களம், நானே வருவேன் என அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.

இந்தநிலையில் இவர் மீது மோசடி புகார் எழுந்துள்ளது .ரூ.1,000 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.5 கோடி வரை ஏமாற்றிய மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது நிறுவனம் தொடர்பாக ரூ.1, 000 கோடி கடன் பெறுவதற்கு முயற்சித்து வந்ததை அறிந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், கடன் வாங்கித் தருவதாக அவரிடம் கூறி ரூ. 5 கோடி பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட பவர் ஸ்டார், கடனை பெற்றுக் கொடுக்காமல் மோசடி செய்ததாக  தொழிலதிபர் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவில் நடிகர் பவன் ஸ்டார் மீது புகார் செய்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் நடிகர் பவர் ஸ்டார் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கடந்த 2013-ம் ஆண்டு கைது செய்தனர். அதன் பின்னர், ஜாமீனில் வெளியே வந்த நடிகர் கோர்ட்டில் முறையாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில், மோசடிப் புகார் தொடர்பாக டெல்லி போலீசாரால் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று கைது செய்யப்பட்டார். சென்னையிலும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fraud complaint Power Star arrested again


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->