கோவில் நிலத்தில் 100 பெண்கள் கொன்று புதைப்பு?.. மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு!
100 women killed and buried in temple land ? Human remains found
தர்மஸ்தலா கோவில் நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள்,பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதா புகார் அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையில் முதல் தடயம் சிக்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில்.இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் கோவில் அருகே உள்ளது , கோவிலுக்கு சொந்தமான இந்த நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் அண்மையில் பகீர் தகவல்கள் வெளியாகின.இது கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம் ஜூன் 3-ந்தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம் அனுப்பினார்.தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை பணியாளர் மங்களூரு கோர்ட்டில் ஆஜராகி நீதிபதி முன்பு விளக்கம் அளித்தார். அப்போது அவர் தன்னுடன் சில எலும்புகளையும் கொண்டு வந்தார்.இது பெரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், இந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக அவர் கூறினார்.இந்தநிலையில் இந்த விவகாரத்தில் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு, முன்னாள் ஊழியர் நேத்ராவதி நதி படித்துறைக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் சுட்டிக்காட்டிய இடங்களில் அவர் முன்னிலையில் அகழாய்வு பணிகளை புலனாய்வு குழு மேற்கொண்டது.
அதில் அவர் குறிப்பிட்ட இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணையில் இது முதல் தடயமாக மாறியுள்ளது.மேலும், சாட்சிகளின் பாதுகாப்பு மற்றும் ஆதாரங்களை சிதைக்கக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், தர்மஸ்தலாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
100 women killed and buried in temple land ? Human remains found