வெளிநாட்டு வேலைக்கு செல்லும் முன் தெரிந்திருக்கவேண்டியவை.. வழிமுறைகளை வெளியிட்ட சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்!
Things to know before going abroad for work Guidelines issued by the Chennai District Collector
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு தேடி செல்லும் நபர்கள், பாதுகாப்பாக பயணம் செய்து, சட்டபூர்வமான வாழ்க்கையை மேற்கொள்ள, அவசியமான வழிகாட்டுதல்களை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., வெளியிட்டுள்ளார்.
செல்லும் முன் அவசியம் செய்ய வேண்டியவை: eMigrate இணையதளத்தில் பதிவு: https://emigrate.gov.in இணையதளத்தில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சி தீர்ப்பு முகவர்கள் மூலமாகவே வேலைக்கு செல்ல வேண்டும்.
விசா, வேலை ஒப்பந்தம், ஆவணங்கள்:பணிக்கு செல்லும் முன் ஊதியம், வேலை விதிகள், உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை இடம்பெறும் வேலை ஒப்பந்தம், விசா மற்றும் தேவையான ஆவணங்களை பெற்றிருக்க வேண்டும்.
வேலைக்கான ஒப்பந்தம் கையில் வைத்திருங்கள்: இது உங்களின் சட்ட உரிமையை உறுதி செய்யும் முக்கிய ஆவணம்.
நாட்டின் சட்ட, கலாச்சாரத்தை மதிக்கவும்: பல நாடுகளில் "Exit Permit" அவசியம்.
ஒரே நிறுவனத்திலேயே வேலை செய்வது கட்டாயமாக இருக்கலாம் – மாற்றம் அனுமதிக்கப்படாது.
தவிர்க்க வேண்டிய அபாயங்கள்: பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் செல்லவேண்டாம்சுற்றுலா விசாவில் வேலை செய்யக்கூடாது – இது சட்டவிரோதம், கைது, அபராதம், சிறை தண்டனைக்கு காரணமாகலாம்.
உதவி தேவைப்பட்டால்:இந்தியாவில் இருந்து: 1800 309 3793,வெளிநாடுகளில் இருந்து: 080 6900 9900 (Missed call: 080 6900 9901)மின்னஞ்சல்:nrtchennai@gmail.com,nrtchennai@tn.gov.in
வலைதளம்: https://nrtamils.tn.gov.in
நினைவில் வைத்திருக்க வேண்டும்:சட்டபூர்வமான வழியில் சென்றால்தான் பாதுகாப்பான வேலை, நிம்மதியான வாழ்கை!அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள் – மோசடிகளிலிருந்து உங்களை காக்குங்கள்.
English Summary
Things to know before going abroad for work Guidelines issued by the Chennai District Collector