சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள்: முகமது சிராஜ் அசத்தல்: 05-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆல் அவுட்டான இங்கிலாந்து..!
Mohammed Siraj takes 200 wickets in international cricket
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் முகமது சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா அபாரமாக பந்து வீசினர். இதன்காரணமாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தற்போது ராகுல் ஆட்டமிழந்துள்ள நிலையில், இந்தியா 24 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், முகமது சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதில் முகமது சிராஜ் போப், ஜோ ரூட், ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டிக்கு முன்னதாக முகமது சிராஜ் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 199 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஒல்லி போப் விக்கெட்டை வீழ்த்திய போது, சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
English Summary
Mohammed Siraj takes 200 wickets in international cricket